சகோதரிகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுவன் டீ விற்கும் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த சுபன் என்ற 14 வயது சிறுவன் தனது தாய்க்கு உதவி புரியும் விதமாக டீ விற்பனை செய்கிறார். சுபனின் தந்தை 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவரது தாய் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக இருந்தார்.
ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையின்றி வருமானமின்றி வறுமையில் வாடினர். அவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சிறுவன் கூறுகையில், “எனது சகோதரிகளின் படிப்பு பாதிப்படைய கூடாது என்பதற்காக நான் படிப்பதை டீ விற்பனை செய்ய தொடங்கினேன் என தெரிவிக்கிறார். மேலும் சொந்தமாக கடை இல்லாததால் பேந்தி பஜார் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் டீ போட்டு, அதனை மற்ற நாக்பால் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கிறார்.
இதனால் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொடுக்கிறார். அதில் சிறிது தொகையை சேமித்து வைக்கப்படுவதாகவும் பீள்ளிகள் திறந்த பிறகு தனது படிப்பு தொடரப்படும் என்றும் சுபனூ தெரிவித்துள்ளார்.