பிரிட்டன் மகாராணியார் இளவரசர் ஹரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓப்ராவின் ப்ரோ தலைமையில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்பேட்டியில் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அரண்மனையில் தங்கள் குழந்தையின் நிறம் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாகவும், அது யார்? என்று தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி குழந்தையின் நிறம் குறித்து பேசியது மகாராணியரோ அல்லது இளவரசர் பிலிப்போ கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இளவரசர் வில்லியமிற்கும், தனக்கும் இடையே சில பிரச்சினைகள் இருப்பதாகவும், தங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் செல்வதாகவும், கடந்த 2019 ம் ஆண்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஹரி தெரிவித்திருந்தார்.
மேலும் அதே தகவலைதான் தற்போது ஓப்ராவுக்கு அளித்த பேட்டியிலும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் மகாராணியார் ஹரியை சந்தித்து பேச இருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் போது இளவரசர் ஹரிக்கும், வில்லியத்துக்கும் இடையே உள்ள விரிசலை சரி செய்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துவைக்க மகாராணியார் புரோக்கர் வேலை பார்க்க போவதில்லை என்று அரண்மனையில் உள்ள நபர் ஒருவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.