சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
பி.சி.சி.ஐ.யின் தலைவர் சௌரவ் கங்குலியின் சகோதரர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளரான ஸ்னேகாஷிஷ் கங்குலிக்கு நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் கல்கத்தாவில் உள்ள பெல்லி வூ கிளினிக் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்னேகாஷிஷ் கங்குலியின் குடும்பத்தினரான மனைவி மற்றும் மாமியாருக்கு கொரோனா வைரஸினால் பாதிப்பு ஏற்பட்ட போது செய்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குடும்பத்தினரை மேலும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருடைய சகோதரரான சௌரவ் கங்குலி உடன் தங்கியிருந்தார், எனவே சௌரவ் கங்குலி அரசின் விதிமுறைகளின் படி தன்னைத்தானே வீட்டிலில் தனிமைப் படுத்திக் கொண்டார்.