Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு”…. வெளியான படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்….!!!!!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த சிம்பு இடையில் சில சறுக்கல்களை சந்தித்து மீண்டும் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக சிம்பு 20 கிலோ வரை எடை குறைத்து வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கின்றது. படத்தை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |