நடிகர் கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தந்திரன் என பல வெற்றிப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கௌதம் கார்த்திக், “தேவராட்டம்” திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. படத்தில் நடிக்கும்போதே இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர். நாளடைவில் காதல் பூத்திருக்கின்றது. சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது வீட்டில் தெரியப்படுத்தி உள்ளார்கள். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இவர்கள் காதலித்தது குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளிவரவில்லை அவ்வளவு பாதுகாப்புடன் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.