Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் வசதி அறிமுகம்…. பெற்றோர்கள் மகிழ்ச்சி….!!!

மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழைய சின்னார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கடந்த பல வருடங்களாக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையானது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின்படி குழந்தைகளுக்காக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி வாகனத்தை ஆலம் தனியார் தொண்டு நிறுவனமும், பொள்ளாச்சியில் இயங்கிவரும் பேட்டரி வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமான டார்க் மின்சாரம் வாகனமும் இணைந்து தயார் செய்துள்ளது. இந்தப் பேட்டரி  வாகனத்தில் ஓட்டுநர் இல்லாமல் 12 குழந்தைகள் வரை தனியாக செல்லலாம்.

இந்நிலையில் பேட்டரி வாகனம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பேட்டரி வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த வாகனங்களை மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும், அவசர மருத்துவ உதவிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சில பழங்குடியின கிராமங்களிலும் மக்களின் வசதிக்காக பேட்டரி வாகனங்களை விரைவில் செயல்படுத்த இருப்பதாக வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

Categories

Tech |