கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு முந்தினம் அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நடைபெற்றதாக செய்தி வந்தது அதன் பின் அந்த காரில் இருந்து சிலிண்டர் வெடித்துள்ளது என்ற செய்தி வந்தது. அதன் பின் தமிழக காவல்துறை டிஜிபி ஏடிஜிபி போன்ற விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு தனிப்படைகள் அமைத்துள்ளனர் பாஜக வலியுறுத்திய பின் சிலிண்டர் வெடித்து விபத்து நடைபெற்றதாக டிஜிபி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இந்தியாவில் குறிப்பாக கோவைக்கு அருகில் இருக்கும் பாலக்காட்டில் நடைபெற்றுள்ளது. இதில் பாலக்காட்டில் அபூபக்கர், கோவையில் அசாருதீன் போன்ற கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் இதில் தொடர்பு இருக்கலாம் என்னும் விதமாக காவல்துறை சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தியும் கூட காதில் விழாத மாநில அரசு காவல்துறை இந்த விபத்து ஏதோ எல்பிஜி சிலிண்டர் வெடித்தது போலவே ஒரு ஜோடனையை செய்து கொண்டிருக்கிறது. அதன் பின் அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை மேற்கொண்ட போது கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், பியூஸ் ஓயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் கூறவில்லை மேலும் தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை எனவே கூறியுள்ளார்.