கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் மேலும் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் சென்னையில் தனியாக போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.