Categories
மாநில செய்திகள்

கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு… முதல்வர் 4 நாட்கள் சுற்றுப்பயணம்…!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். சென்னை விமானத்திலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் மு க ஸ்டாலின் கோவையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். மேலும் கோவையில் முதல்வர் ஸ்டாலின் காலை அரசு நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிற கட்சியினர்  திமுகவில்  இணைகின்றார்கள். இந்த நிலையில் திருப்பூருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி செல்லும் முதல்வர் சிறு குறு  நிறுவனங்களின் சார்பில் நடைபெறும் தொழிலுக்கு தோள் கொடுப்போம் எனும் மாநாட்டில் கலந்து கொள்கின்றார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்.

Categories

Tech |