Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. மண்சரிவால் தேயிலை செடிகள் சேதம்…. வெள்ளபெருக்கினால் மக்கள் கடும் அவதி…!!!

தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி தண்ணீரும், ஆழியாறு அணைக்கு வினாடிக்கு‌ 814 கன அடி தண்ணீரும், சேலையாறு அணைக்கு வினாடிக்கு 5,408 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழையின் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு அக்கா மலை எஸ்டேட் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட தேயிலைச் செடிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, ஒரு வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுவதோடு, மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |