Categories
உலக செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு…. 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம்…!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால்அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

ஒருசில தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிஷீயீல்டு கொரோனா தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகளுக்கு உண்மையில் நல்ல செய்தி. எனினும் நுழைவு வழிகாட்டு நெறிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |