Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றக்கூடாது… எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக…!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 44, 301 கோவில்கள் உள்ளன. அதில் 50 கோயில்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 47 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த நகை கணக்கெடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு மற்றும் சென்னை மண்டலத்திற்கு இந்திரா நீதிபதி ராஜி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் இருந்து எடுக்கப்படும் நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலை நிறுவனத்தில் 24 கேரட் தங்க கட்டிகளை உருக்கி வைப்பு நிதியில் வைத்து வருமானம் ஈட்ட உள்ளது. மேலும் அதிலிருந்து வரும் வட்டித் தொகையை கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்புக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியது, கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பின் அந்த கோயிலுக்கு மட்டும் தான் சொந்தமானது என்பதால் கோயில் நகைகளை என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தக் கோயில்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர இது அறநிலையத்துறையின் பணி இல்லை என்று கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் என்பவர் கோவில் நகைகளை உருகுவதால் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் கோவிலில் உடைந்துபோன நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளதால் மன்னர்கள் ஜமீன்தார்கள் மற்றும் அறங்காவலர் ஆகியோர் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இப்பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |