செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு நீதி அரசர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஆகியோர் தலைமையிலும் கோவில் நகைகளை உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்கட்டமாக திருவேற்காடு மற்றும் சமயபுரம், இருக்கன்குடி ஆகிய மூன்று தளங்களில் அதற்குண்டான தங்கத்தை திரிக்கின்ற பணி நடந்திருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தவுடன் கூடிய விரைவில் அதற்கு அறங்காவலர்கள் நியமித்து அந்த தங்கத்தை மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான அந்த நூற்றாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கி, அதை வைப்பு நிதியில் வைத்து எந்தெந்த திருக்கோவிலில் இருந்து தங்கம் எடுக்கப்பட்டதோ, அந்த திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு, பக்தர்களுடைய தேவைக்கு அதில் வருகின்ற வைப்பு நிதியை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம். அதில் எந்தத் தொய்வும் இல்லை, தொடர்ந்து அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோவில்கள் நம்முடைய பெரியபாளையம் பவானி திருக்கோவில் போன்ற திருக்கோவில்களில் அந்த தங்கத்தை உருக்குவதற்கு அனுமதி கேட்டு, சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருக்கு விண்ணப்பித்து இருக்கின்றார்கள். அந்த பணிகளையும் விரைவில் மேற்கொள்வோம், அந்தப் பயணிகள் எந்த வகையிலும் தடையில்லை. அதேநேரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.