கோவில்பட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் கசவன்குன்று விளக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் 17 வயது சிறுவன் வேனை ஓட்டி வந்தது தெரிய வந்தது. மேலும் வேனில் 35 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்து வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.