Categories
மாநில செய்திகள்

கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு… ரூ.5000 ஊக்கத்தொகை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்து சமய அறநிலைத்துறை கோவில் ஊழியர்கள் 1,749 பேர் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |