சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய சேதுபதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன் இன்று வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என கூறினார்.
அதனை தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்று “கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல” என்று நீதிபதி கூறினார். அத்துடன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என்றும் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.