Categories
தேசிய செய்திகள்

கோவிலை தாக்கிய மின்னல்…. பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்கா என்ற கிராமத்தில் உள்ள பழமையான ராஜ்வாடி கோவிலில் சவான் சோமவர் என்ற சிறப்பு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் கூடினர். அங்கே இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கோவிலில் மின்னல் தாக்கிய நிலையில் கோவிலில் இருந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர்.

உடனடியாக உள்ளூர் வாசிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |