Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோவிலுக்கு சென்ற பக்தர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுப்பிரமணியன் மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுப்பிரமணியனை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |