கோவிலுக்கு சென்ற பெண்ணின் சேலை தீப்பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவில் வேதநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மாதா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு மேலுகுவர்த்து ஏந்தி வழிபாடு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்தோணியம்மாள் சேலையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அனைத்து படுகாயமடைந்த அந்தோணியம்மாளை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்தோணியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.