விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணக்கன் பட்டியில் மூட்டை சுவாமி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்கின்றனர். இதில் விதிமுறைகளை மீறி அதிக அளவு பக்தர்களை ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 5 ஆட்டோக்களை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ ஓட்டுனர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.