கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கூடக்கோவில் போலீஸ் சரகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.