மின்சாரம் பாய்ந்து மயில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுபுதூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு மயில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஒரு மின்மாற்றியின் கம்பியில் மயில் சிக்கிவிட்டது.
இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.