Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோவால் பெரும் பரபரப்பு ….!!!!!

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2  பெண்கள்  நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2  பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில்  இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

மேலும் அவர்கள்  தாங்கள் நடனம் ஆடுவதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த மத வழிபாட்டுத் தல நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த 2  பெண்களும்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |