Categories
தேசிய செய்திகள்

“கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்”… வைரலான வீடியோவால்… இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு…!!!

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகாகாளிஸ்வர் கோவில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் மகாகாளிஸ்வர் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தரிசனம் செய்வதற்கு வந்திருந்த மனிஷா ரோஷன் என்ற இளம்பெண் கோவிலுக்குள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் கோவிலுக்குள் நடனமாடியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். கோயிலுக்குள் விதிகளை மீறி நடனமாடி, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள மனிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |