கோவிலில் திருட முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்துவிட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேத்துமடை பகுதியில் கூலி தொழிலாளியான ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் மகாகாளி அம்மன் கோவில் மதில் சுவர் மீது ஏறி உள்ளே குதித்துவிட்டார். அதன் பிறகு ஜேசுதாஸ் கோவில் கதவை உடைத்து திருட முயற்சி செய்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேசுதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.