Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் இருந்த வாலிபர்கள்…. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக சுரேஷ், கார்த்திக், செந்தில்குமார், ராஜ் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |