கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன.
மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு பள்ளிக்கூடங்கள், பாதுகாப்பு இருப்பிடமாக மாற்றப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக 400 மில்லி மீட்டர் அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.