இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் ICMR மற்றும் தேசிய பயாலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து வேலை செய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்த 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பல்வேறு பல்வேறு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பங்கேற்ற அவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாத நிலைகள் மூன்றாம் கட்ட சோதனை நடத்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் கட்ட சோதனை நடத்த தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து விரைவில் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்பட உள்ளன.