Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கோலிவுட் பிரபலங்கள் கண்டனத்துடன் கோரிக்கை”… ப்ளூ சட்டை மாறன் கேட்பாரா…???

ஹாலிவுட் பிரபலங்களின் கோரிக்கைகளை ப்ளூ சட்டை கேட்பாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்ததற்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி அவர் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவரின் இப்படிப்பட்ட விமர்சனத்தால் இவரின் தரம் தாழ்ந்து வருகின்றது.

நடிகர் ஆரி இவரின் விமர்சனத்துக்கு கூறியுள்ளதாவது, “படத்தை திருத்திக் கொள்ளும் கருத்துக்கள் சொல்லலாமே தவிர அந்த படத்தை காலி பண்ணுவது மாதிரி கமெண்ட்ஸ் சொல்வது ரொம்ப தவறாத ஒன்று” என கூறியிருந்தார்.

மேலும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளதாவது, திரைப்படங்களை கண்டபடி விமர்சனம் செய்யாதீர்கள். குறைகளை சொல்லுங்கள் திருத்திக் கொள்ளலாம். அதற்காக மோசமாக விமர்சிக்கக் கூடாது என கூறியிருந்தார். இயக்குனர் பாண்டிராஜ், “படங்களையும் நடிகர்களையும் மோசமாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் மருந்தை தேன் தடவி கொடுக்காவிட்டாலும் விஷயம் தடவை கொடுக்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

ப்ளூ சட்டையின் இந்த விமர்சனத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. விமர்சனம் செய்யுங்கள், ஆனால் யாரையும் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்யாமல் இருங்கள் என்று தான் கூறி வருகின்றனர். ஆனால் ப்ளூ சட்டை இதை கேட்பாரா என அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Categories

Tech |