சேலம் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்து நேற்று திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. அந்த விழாவின் போது பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் பூங்கரகம் எடுத்து வி.என் பாளையத்தில் தொடங்கி தேர் வீதி மற்றும் சந்தைபேட்டை வழியாக கோவிலை வந்தடைந்துள்ளது.
மேலும் ஊர்வலத்தில் காளி வேடம் அணிந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.