Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மாலை 5 மணிக்கு தெப்பத்தில் காட்சி அளித்த முளைப்பாரி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

Categories

Tech |