Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு…. பக்தர்கள் தரிசனம்….!!

உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநன்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய தலமான இந்த ஆலயத்தில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது.

இதனையடுத்து கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரர் ஆலயக்கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Categories

Tech |