Categories
விளையாட்டு

கோலாகலமாக துவங்கியது…. டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!!!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது.

இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |