நைஜீரியாவிலுள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் கழன்றதில் அது பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நைஜீரியாவிலுள்ள தாராபாவிலிருக்கும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்தின் ஒரு பக்க டயர் அதி வேகத்தின் காரணமாக கழன்றுள்ளது.
ஆகையினால் அந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறியதாவது, வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் அவ்வப்போது அதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.