நல்லினம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது கார் மோதிய கோர விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நன்னிலம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர்மீது கார் மோதிய சிசிடி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயத்துடன் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையில் நின்ற வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் நோக்கிக் காக்காகொட்டூர் என்ற பகுதியில் எட்டியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த முதியவர் காத்தான் வயது 65 என்பவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூரில் நோக்கிச் சென்ற கார் நிலைதடுமாறி அவர்மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த காத்தான் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் போலீசார் விசாரணை செய்ததில் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பேரளம் அருகே கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ராமமூர்த்தியை நன்னிலம் காவல்துறையினர் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவானது விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு வாலிபர் உயிர் தப்பினார்.