Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோர்ட் வளாகத்திற்குள்…. மத போதகரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்…. நெல்லையில் பரபரப்பு….!!!

நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து நவநீதகிருஷ்ணனை தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது தாழையூத்து பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது மத போதகர் ஜோஸ்வா தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெபம் நடத்தியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் நவநீத கிருஷ்ணனின் தங்கையை மத போதகருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து நடந்த சில பிரச்சனைகளின் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு வாலிபரின் தங்கை தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் தன்னுடைய தங்கையின் இறப்புக்கு காரணமான மத போதகர் ஜோஸ்வா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தன்னுடைய தங்கையை மத போதகருக்கு அறிமுகம் செய்து வைத்த பூரணவள்ளி என்ற பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டு அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தார்.

அதன் பிறகு மத போதகரின் கார் ஓட்டுநர் வினோத்குமார் என்பவரையும் கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். இந்த சம்பவங்களுக்கு நவநீதகிருஷ்ணன் மீது பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் மத போதகரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை பின்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளையே மத போதகரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே பாளையங்கோட்டை காவல் துறையினர் நவநீதகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |