பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரியூர் நான்கு முனை சந்திப்பு சாலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உள்அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் காளீஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சாயல்ராம், மாணவர் பாசறை செயலாளர் அனீஸ் பாத்திமா, மாவட்ட ஒன்றிய தொகுதி பொறுப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் உள்பட கட்சி தொண்டர்கள் பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.