பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டிப்பட்டி தபால்நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கட்டுபடுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட துணைச்செயலாளர் இளையராஜா, துணைத்தலைவர் மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ஞானம்மாள் மற்றும் நிர்வாகிகள் ஈஸ்வரன், ராஜாராம், சிவகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் கட்சி கொடிகளை ஏந்தி கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றதால் சற்று பரபரப்பு நிலவியது.