Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் முருகராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் அசோகன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதனையடுத்து சி.ஐ.டி.யு மாவட்ட துணை செயலாளர் சிவராஜ், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி,தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கட்டுமான வாரிய உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, எச்.எம்.எஸ். கலைவாணன் மற்றும் உறுப்பினர்கள் என பாரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |