புதுக்கோட்டை சார்ந்த நாத சுவாமி கோவில் அருகே உள்ள பல்லவர் குலத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதிகள் சாந்த நாதசுவாமி கோவில் அருகே பல்லவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நான்கு பகுதியிலும் கீழராஜவீதி வடக்கு, கீழராஜவீதி தெற்கு, ராஜவீதி கீழராஜவீதி வீதிகள் அமைந்துள்ளன. நகரவாசிகள் வெளியூரில் இருந்து வந்துள்ள கூலி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்டோரும் இந்த குளத்தில் நீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் அண்மைகாலமாக குளத்தில் அருகாமையில் உள்ளவர்கள் குளத்திற்குள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். மேலும் கடந்த சில நாட்களாக குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தின் நான்கு கரைகளிலும் செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.