தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு கோயில் திறப்பு சம்பந்தமாக பாஜகவினருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, ஆன்மிகத்திற்கும் இந்துக்களுக்கும் விரோதமானது திமுக அரசு. திமுக கோயில் கொள்ளை அடிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த அரசாங்கம் ஹிந்து விரோதி அரசாங்கம். அதற்கு உதாரணமாக கோவிலில் கொள்ளை அடிக்கிறாங்களே என்று கூறியுள்ளார்.