Categories
மாநில செய்திகள்

கோயில்களில்… “முடி காணிக்கைக்கு காசு வாங்கினால்”…. பணி நீக்கம்…. தமிழக அரசு அதிரடி!!

கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலித்தால் காவல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.. இதனையடுத்து இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இதனை தொடர்ந்து மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதாவது, முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் எந்தவித கட்டணமும் கேட்கக் கூடாது. அவ்வாறு கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கும் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

கட்டணம் வசூலிக்கும் பணியாளர் மீது காவல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை மூலம் பணி நீக்கம், உரிமம் ரத்து செய்யப்படும் நபர்களுக்கு பதில் புதிய நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பணிநீக்கம், உரிமம் ரத்து செய்யப்பட்ட நபர்களை மீண்டும் பணியமர்த்தல் கூடாது என்று தெரிவித்துள்ளது..

Categories

Tech |