Categories
சினிமா

“கோப்ரா” படம்…. நடிப்பில் பிச்சுட்டாரு…. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…..!!!!

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் #Cobra #ChiyaanVikram  போன்ற ஹேஷ்டேக்குகளையும் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் விக்ரம் பன் முகத் திறமையுடன் இருக்கிறார். விக்ரம் ஒரு பச்சோந்தி மற்றும் எந்தஒரு கதாபாத்திரத்திலும் மிகவும் எளிதாக நடிக்கிறார். இப்படத்தில் சுவாரஸ்யமான ஐடியாக்கள் மற்றும் சில அற்புதமான தருணங்கள் இருக்கிறது. படத்தை பார்த்த நெட்டிசன் பதிவிட்டு இருப்பதாவது, கோப்ரா திரைப்படத்தை பற்றிய என்னுடைய பர்சனல் கருத்து நான் மிகவும் எதிர்பார்த்து போனேன். ஆனால் படம் ஓகே தான். நடிகர் விக்ரம் அண்ணன் நடிப்பில் பிச்சுட்டாரு. சொல்ல வார்த்தையே கிடையாது .ஏஆர் ரஹ்மான் பிஜிஎம் ஓகே. ஆனா அது ரிப்பீட் பி.ஜி.எம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |