Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோப்ரா’வின் அசத்தலான அப்டேட் வெளியிட்ட இயக்குனர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ திரைப்படம் குறித்த தகவலை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகனான விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ‌.

இந்நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கோப்ரா திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது .

Categories

Tech |