Categories
பல்சுவை விளையாட்டு

கோபத்தில் மைதானத்திலேயே…. “ரசிகரின் செல்போனை உடைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ”…. எதுக்கு தெரியுமா?….!!!!

கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு கோபமாகவும் மிகவும் வருத்தமாகவும் வெளியே செல்லும்போது அவரது வழியில் ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர் அந்த செல்போனை அங்கேயே வைத்து கீழே போட்டு அடித்து நொறுக்கி விட்டார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல் ஆனதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் தெரிவித்து வந்தனர். அந்த செல்போன் ஜேக் என்கின்ற 16 வயதுடைய சிறுவனின் செல்போன். அதைத்தொடர்ந்து அந்த சிறுவனின் அம்மா சாரா கில்லி ஒரு இன்டர்வியூவில் ரொனால்டோ தனது மகனை மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் அவரது செல்போனையும் உடைத்துள்ளார். எனவே ரொனால்டோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதேநேரத்தில் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான கடிதத்தையும் தெரிவித்துள்ளார். அதில் “நாம் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களில் உணர்ச்சிகளை சமாளிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல. இருப்பினும் நாம் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இந்த விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். அன்றைய தினம் நான் செய்தது தவறு. அதனால் ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கும் போட்டிக்கு அந்த சிறுவனை நான் வரவேற்கிறேன்” என்று எழுதி இருந்தார்.

Categories

Tech |