தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர் அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப்படுவதாகவும் சிலரை அடிக்க பாய்ந்து உள்ளார் என்றும் நெருக்கமானவர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்த சர்ச்சை குறித்து நடிகை ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில், “தைரியம் என்பது எங்கோ வெளியே இருந்து எடுத்துக் கொண்டு வருவது அல்ல. அது நமக்குள்ளேயே இருக்கிறது.
அந்த விஷயம் எனக்கு பள்ளி நாட்களில் நன்றாக புரிந்தது.நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. எனக்கு கோபம் வந்தால் என்னால் கட்டுப்படுத்த முடியாது.பள்ளி நாட்களில் மட்டும் இன்றி கல்லூரிகளிலும் சினிமா துறைக்கு வந்த பின்னரும் என்னை தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்து இருக்கிறேன்.எனது கோபத்திற்கு பின்னால் அகம்பாவம் எதுவும் இருக்காது கட்டாயம் காரணம் தான் இருக்கும் என்று அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.