நம்மில் நிறைய பேருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி தெரிந்திருக்கும். கால்பந்து உலகில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவரின் ஒரு வருட வருமானம் மட்டுமே 700 கோடி. மிக வறுமையான குடும்பத்தில் இருந்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இப்படிப்பட்ட இவர் கோபத்தில் செய்த ஒரு செயல் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மற்றும் செர்பியாவிற்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அதில் இரண்டு அணிகளும் 90 நிமிடங்கள் வரை இரண்டு ஸ்கோர்கள் எடுத்து ஒரே நிலையில் இருந்தன.
அதன் பிறகு இறுதியாக ரெனால்டு அடித்த ஒரு கோல் இலக்கை சரியாக எட்டிவிட்டது. இருந்தாலும் அதனை ஏற்க மறுத்த ரெப்ரி மஞ்சள் அட்டை கொடுத்து ரொனால்டோவை வெளியே அனுப்பிவிட்டார். அதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற ரொனால்டோ அவருடைய கையில் அடைந்திருந்த கேப்டன் பேண்டை அரங்கத்தில் தூக்கி வீசி விட்டுச் சென்றார். அதனை அரங்கத்தில் வேலை செய்து வந்த ஒரு நபர் எடுத்து வைத்துள்ளார். பிறகு மூன்று நாட்கள் கழித்து அதனை ஏலத்தில் விட்டார்.
அதில் மிகப்பெரிய தொகை அவருக்கு கிடைத்தது. அந்தத் தொகையை செர்பிய நாட்டைச் சேர்ந்த 6 மாத குழந்தை மிகப்பெரிய நோயால் பாதிக்கப் பட்டிருந்தது. அந்தக் குழந்தையின் மருத்துவ செலவிற்காக அந்த தொகையை கொடுத்து உதவியுள்ளார். அந்த குழந்தை தற்போது குணமடைந்து நலமாக உள்ளது. தனது கோபத்தால் ரொனால்டோ செய்த ஒரு காரியம் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.