நீலகிரி கால்பந்து கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்ததில் நீலகிரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காந்தி மைதானத்தில் நீலகிரி கால்பந்து கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி கால்பந்து போட்டியானது நடைபெற்றதில் நீலகிரி, கோவை, சென்னை, தேனி, திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றது.
இறுதிப்போட்டியில் நீலகிரி அணியும் தஞ்சாவூர் அணியும் மோதியது. நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இறுதி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற நீலகிரி அணிக்கும் இரண்டாவது இடத்தை பிடித்த தஞ்சாவூர் அணைக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.