கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இங்கு பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இந்நிலையில் முதலில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோர்ட் சாலை, செம்மங்குடி சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் சாலை, கே.பி ரோடு, கம்பளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.