பனை மரத்தில் இருந்து பல வகையான பொருட்களை நாம் பெறுகிறோம் அதில் ஒன்று தான் நுங்கு. இதில் வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளன அதோடு வெயில் காலத்தில் வேர்குறு, அம்மை ரத்தசோகை, கோப்பாளம், குடல் புண், மலச்சிக்கல், வயிற்று போக்கு, போன்றவை வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.
மேலும் உடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.
நுங்கின் நீரை குடிப்பதால் உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு உடனே தாகம் அடங்கும். நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளும் தீரும்.